
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் ஜெய்ப்பூரில் நடைபெறும் லீக் சுற்றுக்கான 28-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இதில், முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக இளம் வீரர் ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் களம்புகுந்தனர். நிதானமாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்ந்த நிலையில் சஞ்சு சாம்சன் 15 ரன்களில் ஸ்டெம்பிங் ஆகி வெளியேறினார். அவருக்குப் பின்னர் வந்த ரியான் பராக் சில பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசி அதிரடி காட்டினார். 30 ரன்கள் எடுத்த நிலையில் அவர் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.
இதையும் படிக்க: பச்சை நிற ஜெர்ஸியில் களமிறங்கிய ஆர்சிபி! ஏன் தெரியுமா?
நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சொதப்பிக் கொண்டிருந்த ஜெய்ஸ்வால், இந்தப் போட்டியி நிதானமாக அதேவேளையில் அதிரடி காட்டவும் தவறவில்லை. சிறப்பாக விளையாடி தனது 11-வது அரைசதத்தை நிறைவு செய்தார். 47 பந்துகளில் 75 ரன்கள்(10 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்த நிலையில் ஹேசில்வுட் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். அவருக்குப் பின்னர் வந்த ஹெட்மயர் 9 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
இறுதியில் அதிரடி காட்டிய துருவ் ஜூரேல், 2 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 35 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். கடைசி பந்தை எதிர்கொண்ட நிதிஷ் ரானா ஒரே பந்தில் பவுண்டரியுடன் முதல் இன்னிங்ஸை முடித்து வைத்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்தது. ஆர்சிபி தரப்பில் புவனேஸ்வர் குமார், யஷ் தயாள், ஹேசில்வுட், க்ருனால் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையும் படிக்க: புழுதிப் புயல்: தில்லி - மும்பை போட்டியில் மழை குறுக்கீடா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.