பச்சை நிற ஜெர்ஸியில் களமிறங்கிய ஆர்சிபி! ஏன் தெரியுமா?

பெங்களூரு அணி பச்சை நிற ஜெர்ஸியில் விளையாடுவது பற்றி...
பச்சை நிற ஜெர்ஸியில் களமிறங்கிய ஆர்சிபி வீரர்..
பச்சை நிற ஜெர்ஸியில் களமிறங்கிய ஆர்சிபி வீரர்..
Published on
Updated on
1 min read

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பச்சை நிற ஜெர்ஸி அணித்து விளையாடுகிறது.

நடப்பு ஐபிஎல் தொடரின் ஜெய்ப்பூரில் நடைபெறும் லீக் சுற்றுக்கான 28-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

காசு சுண்டுதலின் பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் பேசுகையில், “அதிக மரங்கள் நடுவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த பச்சை நிற ஜெர்ஸி அணித்திருக்கிறோம்” என்றார்.

வழக்கமாக நீலம், சிவப்பு கலந்த சீருடையில் ஆர்சி அணி விளையாடும். ஆனால், இன்றையப் போட்டியில் அந்த அணியினர் பச்சை நிற ஜெர்ஸியில் விளையாடுகின்றனர்.

ஆர்சிபி அணி பச்சை நிற ஜெர்சியில் விளையாடுவது இது முதல் முறை அல்ல. 2011-லிருந்து, இந்த ஜெர்சி ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியில் பச்சை நிற சீருடை அணிந்து விளையாடப்படுகிறது.

இந்த பச்சை நிற ஜெர்சி தேர்வுக்கு பின்னால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் மாற்றத்துக்கான முன்னேற்பாடுகள் இருக்கின்றன. அதாவது, கோ கிரீன்(Go Green) என்று இயற்கையைக் காக்க அனைவரும் தனது வாழ்க்கையில் அதிக மரங்களை நடவேண்டும் என்பதை காட்டுவதே இதன் நோக்கம்.

மேலும், வீரர்களின் பச்சை நிற ஜெர்ஸிகூட மறுசுழற்சி செய்யப்பட்ட துணியால் செய்யப்பட்டது. இது பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதுவரை, 14 போட்டிகளில் பச்சை நிற ஜெர்ஸியில் விளையாடிய பெங்களூரு அணி, அதில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அவற்றுள் ஒரு போட்டியில் முடிவில்லாமல் போனது. கடைசியாக பச்சை நிற ஜெர்ஸியுடன் கொல்கத்தாவுக்கு எதிராக விளையாடியிருந்த ஆர்சிபி அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிக்க: 61 டாட் பந்துகள், 1098 மரங்கள்: சிஎஸ்கேவை கிண்டல் செய்த கேகேஆர் அணி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com