
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரின் ஜெய்ப்பூரில் நடைபெறும் லீக் சுற்றுக்கான 28-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. பெங்களூரு அணியில் எந்தவித மாற்றமுமில்லை. ராஜஸ்தான் அணியில் ஹசரங்கா மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.
கடைசிப் போட்டியில் தில்லியிடம் தோற்ற பெங்களூரு அணி மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும் முனைப்பில் இருக்கிறது. அதேவேளையில், ராஜஸ்தான் அணியும் தனது கடைசிப் போட்டியில் குஜராத் அணியிடம் தோற்றிருந்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ்
யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரன் ஹெட்மயர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மகீஷ தீக்ஷனா, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
பிலிப் சால்ட், விராட் கோலி, ரஜத் படிதார், லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் ஷர்மா, டிம் டேவிட், க்ருணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா, யாஷ் தயாள்.
இதையும் படிக்க: 61 டாட் பந்துகள், 1098 மரங்கள்: சிஎஸ்கேவை கிண்டல் செய்த கேகேஆர் அணி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.