தில்லியின் வெற்றிப் பயணம் தொடருமா? மும்பைக்கு எதிராக டாஸ் வென்று பந்துவீச்சு!

தில்லியின் வெற்றிப் பயணம் தொடருமா? டாஸ் வென்று பந்துவீச்சு!
தில்லியின் வெற்றிப் பயணம் தொடருமா? மும்பைக்கு எதிராக டாஸ் வென்று பந்துவீச்சு!
Published on
Updated on
1 min read

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் அக்‌ஷர் முதலில் பந்து வீசுவதாகத் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் லீக் சுற்றின் 29 வது போட்டியில் தில்லி - மும்பை அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி அணி கேப்டன் அக்‌ஷர் பட்டேல், மும்பை அணியை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தார்.

தில்லி அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஃபாப் டூபிளெசிஸ் காயத்தால் இந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. மும்பை அணியில் எந்தவித மாற்றமுமில்லை.

இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காமல் தில்லி அணி வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. அதேசமயம், 5 முறை சாம்பியனான மும்பை அணி ஒரு வெற்றி, 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கிறது.

இரு அணிகளிலும் அதிரடி ஆட்டக்காரர்கள் குவிந்து கிடப்பதால், இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

தில்லி கேப்பிடல்ஸ்

ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், அபிஷேக் போரெல், கே.எல். ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்‌ஷர் படேல்(கேப்டன்), அஷுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், மோஹித் சர்மா, குல்தீப் யாதவ், முகேஷ் குமார்.

மும்பை இந்தியன்ஸ் 

ரோஹித் ஷர்மா, ரியான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, நமன் திர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.

இதையும் படிக்க: விராட் கோலி - சால்ட் விளாசல்: ஆர்சிபிக்கு 4-வது வெற்றி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com