திருத்தப்பட்ட ஐபிஎல் விதிகளால் பந்து வீச்சாளர்களுக்கு சாதகம்: மோஹித் சர்மா

தில்லி கேபிடல்ஸ் வீரர் மோஹித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது...
மோஹித் சர்மா
மோஹித் சர்மாபடம்: ஏபி
Published on
Updated on
1 min read

தில்லி கேபிடல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் மோஹித் சர்மா ஐபிஎல்-இன் திருத்தப்பட்ட விதிகளால் எங்களைப் போன்ற பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரிய உதவி கிடைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

இந்தாண்டு ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பாக கிரிக்கெட் பந்தில் உமிழ்நீரைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. கரோனா தொற்று காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

போட்டியின் நடுவே இரண்டாவதாக புதிய பந்தினை பயன்படுத்தலாம் எனவும் இந்த சீசனில் புதியதாக விதியை அமல்படுத்தினார்கள்.

இது குறித்து 36 வயதாகும் மோஹித் சர்மா கூறியதாவது:

2-ஆவது பந்து உதவுகிறது

பந்தினை மாற்றலாம் என்பது மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அதைக் கடந்த போட்டியிலேயே பார்த்தோம்.

முதல் இன்னிங்ஸில் 12 ஓவர்களுக்கு பிறகு பந்து ஈரமாகத் தொடங்குகிறது. இரண்டாவது இன்னிங்ஸ் 13 அல்லது 14ஆவது ஓவர்களில் மிகுந்த ஈரப்பதத்தினால் கரண் வீசும்போது பந்து சுழன்றது.

புதிய பந்து நிச்சயமாக வித்தியாசத்தை அளித்தது. ஆனால், 15 அல்லது 16ஆவது ஒவர்களில் பந்து பெரிதாக மாறவில்லை.

100 சதவிகிதம் ஈரப்பதம் வருமெனத் தெரிந்தால் அதற்கேற்ப திட்டமிடலாம்.

உமிழ்நீர் பயன்பாடு மிகப்பெரிய வரம்

விசாகப்பட்டிணத்தில் பயிற்சியின்போது ஈரப்பதம் இருந்தது. ஆனால், போட்டியின்போது சுத்தமாக இல்லை.

உமிழ்நீரைப் பயன்படுத்தியது 100 சதவிகித மாற்றத்தை உருவாக்கியுள்ளது.

70 சதவிகித போட்டியில் பந்து திரும்புவதைப் பார்க்கலாம். ஏனெனில் உமிழ்நீர் அதிகமாகவும் ஈரப்பதம் இல்லை என்பதால் மட்டுமே. அதனால் பந்து கனமாகி திரும்புகிறது என்றார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கரண் சர்மா தில்லி வீரர் கருண் நாயரை புதிய பந்துக்குப் பிறகு ஆட்டமிழக்க செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com