
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னௌ அணி 180 ரன்கள் எடுத்தது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 36ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான், லக்னௌ அணிகள் மோதுகின்றன. ஜெய்ப்பூரில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னௌ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
காயம் காரணமாக ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ரியான் பராக் கேப்டனாக செயல்படுகிறார்.
மேலும் ராஜஸ்தானின் இம்பேக்ட் வீரராக 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கியுள்ளார்.
தொடர்ந்து, களமிறங்கிய லக்னௌ அணியில் மார்ஷ் (4), நிகோலஸ் பூரன் (11), பந்த் (3) என முன்னணி பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
சிறப்பாக விளையாடிய மார்க்ரம், பதோனி ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர்.
மார்க்ரம் 66, 50 ரன்களில் வெளியேற இறுதியில் வந்த சந்தீப் ஷர்மா கடைசி ஓவரில் 27 ரன்கள் சேர்த்தார். ராஜஸ்தானை பொறுத்தவரையில் ஹசரங்கா 2 விக்கெட்டுகளும், சந்தீப் ஷர்மா, தேஷ்பாண்டே, ஆர்ச்சர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 4 ஓவர்களில் 41 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.