இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஜோஸ் பட்லர் அதிரடி: தில்லியை வீழ்த்தியது குஜராத்

ஜோஸ் பட்லரின் அதிரடி காரணமாக தில்லியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.

News image

பட்லர்.

Updated On :19 ஏப்ரல் 2025, 2:22 pm

ஜோஸ் பட்லரின் அதிரடி காரணமாக தில்லியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 35ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், தில்லி கேபிடல்ஸ் அணிகள் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்தின. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தப் ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

தில்லி வீரர்கள் யாருமே அரைசதம் அடிக்காவிட்டாலும் 4 வீரர்கள் 30-க்கும் அதிகமான ரன்களை அடித்து அசத்தினார்கள்.

கடைசி ஓவரில் சாய் கிஷோர் 1 விக்கெட் எடுத்து 9 ரன்கள் மட்டுமே கொடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் தில்லி அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. குஜராத் சார்பில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

சிராஜ், அர்ஷத் கான், இஷாந்த் சர்மா, சாய் கிஷோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.

204 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய குஜராத் அணி ஆரம்ப முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் சுப்மன் கில் 7 ரன்களில் வெளியேற அடுத்து வந்த ஜோஸ் பட்லர் தில்லி அணியின் பந்துவீச்சை சிதறடித்தார்.

சாய் சுதர்சன் 36 ரன்களில் ஆட்டமிழக்க ரூதர்ஃபோர்டு களம் கண்டார்.

அவரும் தன்பங்கிற்கு சிறப்பாக விளையாடினார். இருப்பினும் அவர் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். 19.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து குஜராத் அணி வெற்றி இலக்கை எட்டியது. பட்லர் 97(54பந்துகள்), ராகுல் தெவாதியா 11 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.