
பெஹல்காம் தாக்குதலில் பலியானோருக்கு இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மௌன அஞ்சலி செலுத்தப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெறும் லீக் சுற்றின் 41-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இந்தப் போட்டியின் போது பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக போட்டி தொடங்குவதற்கு முன்னர் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படும் என்று பிசிசிஐ தெரிவித்திருக்கிறது.
மேலும், ஆட்டத்தின் போது வீரர்கள், நடுவர்கள் உள்ளிட்டோர் கைகளில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடவும், போட்டி முடிவில் பயன்படுத்தப்படும் பட்டாசு வெடிக்கும் கொண்டாட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பிஸ்மில்லா, பிஸ்மில்லா... பெஹல்காமில் காயமுற்றோரை மீட்ட முஸ்லிம் இளைஞர்கள்!
அதன் தொடர்ச்சியாக போட்டி வீரர்கள் மற்றும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் சியர் லீடர் கொண்டாட்டங்களுக்கும் இந்தப் போட்டியில் அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மக்களின் நலனுக்காக பிசிசிஐ துணை நிற்பது இது முதல்முறை கிடையாது. 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் பலியானதற்கு, இரங்கல் தெரிவித்து, ஐபிஎல்லில் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு தடைவிதிக்கப்பட்டது. மேலும், இந்தத் தொகை பாதிக்கப்பட்டவர்களில் குடும்பத்துக்கு வழங்கப்பட்டது.
முன்னதாக, ஜம்மு - காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
இதையும் படிக்க: பயங்கரவாத தாக்குதல்: திருமணமான 7 நாள்களில் கடற்படை அதிகாரி பலியான சோகம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.