ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?

ஜஸ்பிரீத் பும்ராவின் சமீபத்திய பேட்டி விராட் கோலி ரசிகர்களை புண்படுத்தியுள்ளது.
Jasprit bumrah looks after taking wickets. (pic from X, Mumbai Indians)
ஜஸ்பிரீத் பும்ரா. படம்: எக்ஸ் / மும்பை இந்தியன்ஸ்.
Published on
Updated on
1 min read

ஜஸ்பிரீத் பும்ராவின் சமீபத்திய பேட்டி விராட் கோலி ரசிகர்களை சீண்டும் விதமாக அமைந்துள்ளது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியுள்ளது.

கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுத்தால் மகிழ்ச்சியில் கொண்டாடுவார்கள். சுனில் நரைன் மாதிரி சிலரே அமைதியாக இருப்பார்கள்.

சுனில் நரைன் வரிசையில் ஜஸ்பிரீத் பும்ராவும் இருக்கிறார். பெரும்பாலான போட்டிகளில் பும்ரா அமைதியாக சிரித்து கடந்துவிடுவார். சில போட்டிகளில் முறைப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸுக்காக ஐபிஎல் தொடரில் விளையாடும் பும்ரா 144 போட்டிகளில் 183 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

ஆஸி. முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் உடனான பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பும்ரா பேசியதாவது:

நானும் தவறாக நடந்துகொண்டிருக்கிறேன்

நானும் சவாலான போட்டி விளையாடி வெல்ல நினைக்கிறேன். ஆனால், அந்த எல்லையை தாண்டாமல் விளையாட நினைக்கிறேன். அனைவரும் வித்தியாசமாக விளையாடுவார்கள்.

தொடக்கத்தில் எனக்கு பயிற்சியாளர்கள் இல்லாததால் தொலைக்காட்சி பார்த்துதான் கற்றுக்கொண்டேன்.

வார்த்தைகள், உடல் ரீதியாக எதிரணியை காயப்படுத்தும் பந்துவீச்சாளர்களை போலவே நானும் சிலமுறை முயற்சித்து இருக்கிறேன். எனக்கு அது ஒத்துவரவில்லை.

கோமாளியாக விரும்பவில்லை

கோபமடைந்தால் சரியாக பந்துவீச முடியாது. அதனால், எனது கோபத்தைக் கட்டுப்படுத்தி பந்துவீச்சில் கவனம் செலுத்தினேன்.

நமது சிறந்த செயல்பாடுகளை அளிக்க வேண்டும்தான். ஆனால், அதற்காக ஆக்ரோஷமாக கொண்டாடி கோமாளியாக விரும்பவில்லை எனக் கூறினார்.

பும்ரா யாரையும் குறிப்பிட்டு இதைச் சொல்லாவிட்டாலும் விராட் கோலி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இது குறித்து அதிருப்தி அடைந்துள்ளார்கள்.

ஆஸி. ஊடகங்கள் கோலியை ’கோமாளி கோலி’ என பிஜிடி தொடரின்போது குறிப்பிட்டது.

இன்று நடைபெறும் குவாலிஃபயர் 2-இல் மும்பை வென்றால் ஆர்சிபியை இறுதிப் போட்டியில் சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com