சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

ஆர்சிபியின் வெற்றி பேரணிக்கு அனுமதி! ரசிகர்களால் திணறும் பெங்களூரு!

ஆர்சிபியின் வெற்றி பேரணிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

Updated On :

ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணியின் வெற்றிப் பேரணிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி திடலில் ஐபிஎல் தொடர் 18-வது சீசனின் நேற்றிரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடங்கி 18 ஆண்டுகளாக கோப்பை வெல்லாத இரு அணிகள் மோதிய நிலையில், முதல்முறையாக பெங்களூரு அணி கோப்பை வென்றுள்ளதால், ஆர்சிபியின் கோடிக்கணக்கான ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.

பெங்களூரு விதான செளதா (கர்நாடக பேரவை மாளிகை) முதல் சின்னசாமி திடல் வரை இன்று(ஜூன் 4) நடைபெறவிருந்த திறந்தவெளி பேருந்து பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் திடீரென ரத்து செய்யப்பட்டது.

ஆர்சிபி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியான வெற்றிப் பேரணிக்கு மீண்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெங்களூரு விதான செளதா முதல் சின்னசாமி திடல் வரை மாலை 5 மணிக்கு தொடங்கும் பேரணி 6 வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் முதலே ஆர்சிபியின் ரசிகர்கள் சின்னசாமி திடல், வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் ஆகிய இடங்களில் குவிந்து வருவதால், போக்குவரத்து நெரிசலால் பெங்களூரு நகரமே திணறி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.