
வெற்றிப் பேரணி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படுமென ஆர்சிபி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். வெறும் 35 ஆயிரம் பேர்தான் நுழைய இடமிருந்த சின்னசாமி அரங்குக்குள் 3 லட்சம் பேர் நுழைந்ததும் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல்கள் மற்றும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். கர்நாடக முதல்வர் சித்தராமையா பலியானோரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகமும் பலியானோரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு அணி நிர்வாகம் தங்களது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்தப் பதிவில், “பெங்களூருவில் நேற்று(ஜூன் 4) நடந்த அசம்பாவிதம் ஆர்சிபி குடும்பத்துக்கு மிகுந்த வேதனையையும் வலியையும் கொடுத்திருக்கிறது. அவர்களை குடும்பத்தினருக்கு ஆர்சிபி நிர்வாகம் மரியாதை நிமித்தமாக ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது.
இந்த சோகமான நேரத்தில் ஆர்சிபி ரசிகர்களுக்கு ஆதரவாக ஆர்சிபி கேர்ஸ் என்ற நிதியும் உருவாக்கப்பட்டுள்ளது. நாங்கள் செய்யும் எல்லாவற்றுக்கும் ரசிகர்கள் எங்களுடன் இருப்பார்கள். இந்தத் துக்கமான நேரத்திலும் ஒற்றுமையாக இருப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிக்க: பெங்களூர் சின்னசாமி அரங்கில் வெறும் 35,000 பேர்தான் கூட முடியும்! ஆனால் கூடியதோ..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.