
சிஎஸ்கே வீரர்கள் பயிற்சியின்போது பதிரானா வீசிய ஏர்க்கர் பந்தில் தோனி சிக்ஸர் அடித்த விடியோ வைரலாகி வருகிறது.
இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச்.22ஆம் தேதி முதல் நடைபெறவிருக்கின்றன.
சிஎஸ்கே அணி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்த்து சேப்பாக் திடலில் வரும் மார்ச் 23-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
இதற்கான பயிற்சியில் சிஎஸ்கே வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். முக்கியமான அனைத்து வீரர்களும் சென்னை வந்தடைந்தனர்.
இந்நிலையில் சிஎஸ்கே நிர்வாகம் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீரர்கள் பயிற்சி செய்யும் விடியோவை வெளியிட்டு வருகிறார்கள்.
அதில், சிஎஸ்கேவின் ’குட்டி மலிங்கா’ எனப்படும் பதிரானா வீசிய ஏர்க்கர் பந்தில் தல தோனி சிக்ஸர் அடித்தார். கிட்டதட்ட ஹெலிகாப்டச் ஷாட் அடிப்பார்.
பந்து சிக்ஸருக்கு சென்று விழும். இதைப் பார்த்து பதிரானா புன்னகைப்பார்.
இந்த விடியோதான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 6 மணி நேரத்தில் இன்ஸ்டாவில் 1.6 மில்லியன் (16 லட்சம்) லைக், 25 மில்லியன் (2.5 கோடி ) பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.