
சிஎஸ்கே வீரர் அஸ்வின் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.
18-ஆவது ஐபிஎல் தொடரில் ஆரம்ப கட்ட போட்டிகள் தொடங்கியுள்ளன. அனைத்து அணிகளும் ஒரு போட்டிகளாவது விளையாடியிருக்கின்றன.
இதில் சென்னை அணி மும்பையுடன் சமீபத்தில் மோதி அசத்தல் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் தமிழக வீரரும் சிஎஸ்கே வீரருமான அஸ்வின் செய்த சாதனையை கவனம் பெறாமல் சென்றது.
ஐபிஎல் வரலாற்றிலேயே பவர்பிளேவில் சுழல்பந்து வீச்சாளர்களிலே முதல்முறையாக 50 விக்கெட்டுகளை எடுத்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதனைக் குறிப்பிட்ட சிஎஸ்கே அணி தனது எக்ஸ் பக்கத்தில், “பவர்பிளேவில் அண்ணாத்த ஆட்டம்” எனக் குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளது.
சிஎஸ்கே அடுத்த போட்டியில் ஆர்சிபியை வரும் மார்ச்.28ஆம் தேதி சந்திக்கவிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.