பயமறியாத இளம் இந்திய வீரர்கள்..! ஆஸி. வீரர் புகழாரம்!

இளம் இந்திய வீரர்கள் குறித்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் பேசியதாவது...
மார்கஸ் ஸ்டாய்னிஸ்
மார்கஸ் ஸ்டாய்னிஸ்படம்: எக்ஸ் / பஞ்சாப் கிங்ஸ்
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுன்டரும் பஞ்சாப் கிப்ஸ் அணி வீரருமான மார்கஸ் ஸ்டாய்னிஸ் இளம் இந்திய வீரர்கள் பயமில்லாமல் விளையாடுவதாகக் கூறியுள்ளார்.

18-ஆவது ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் குஜராத்தை வீழ்த்தியது.

இதில் அறிமுக இளம் வீரர் பிரியன்ஸ் ஆர்யா சிறப்பாக விளையாடினார். மும்பை அணியிலும் விக்னேஷ் புதூர் சிறப்பாக பந்து வீசினார்.

இந்நிலையில் பிடிஐ-க்கு அளித்த நேர்காணலில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் கூறியதாவது:

பயமறியாத இளம் இந்திய வீரர்கள்

இந்திய கிரிக்கெட்டில் சிறந்த ஆழமான வீரர்கள் இருக்கிறார்கள். எப்போதும் இருக்கிறார்கள். அவர்களது திறமையை உலகிற்கு காட்ட காத்திருக்கிறார்கள்.

இந்தியர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். ஐபிஎல் -உடன் வளரும்போது தங்களது இளம் பருவத்திலேயே அழுத்தமிக்க போட்டிகளில் விளையாடுகிறார்கள்.

குறிப்பாக இந்திய அணிக்காக விளையாடும்போது இளம் வீரர்கள் பயமில்லாமல் விளையாடுவதைப் பார்க்க சிறப்பாக இருக்கிறது.

ஐபிஎல் - சொந்த மண்ணில் விளையாடுவது போலிருக்கும்

இதுவரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடாத சில பஞ்சாப் வீரர்கள் பிரமிக்க வைக்கிறார்கள்.

அதிகமான ஆஸி. வீரர்கள் அணியில் இருக்கிறார்கள். அதனால், இது சொந்த மண்ணில் இருப்பதுபோலவே இருக்கிறது.

நான் இங்கு மாறிய பிறகு இது எனது 2ஆம் ஆண்டு ஐபிஎல் தொடராகும். அதனால் இது பழக்கப்பட்டதாகிவிட்டது. நான் ஐபிஎல்லை நேசிக்கிறேன். இதற்காக நான் காத்திருந்தேன் என்றார்.

பஞ்சாப் அடுத்த போட்டியில் ஏப்.1ஆம் தேதி லக்னௌ அணியுடன் மோதவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com