சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில் விளையாடுவாரா?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஷுப்மன் கில்
ஷுப்மன் கில்படம் | குஜராத் டைட்டன்ஸ் (எக்ஸ்)
Updated on
1 min read

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நாளை (மே 2) நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடவுள்ளன. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான கடந்த போட்டியில் ஷுப்மன் கில் ஃபீல்டிங்குக்கு வரவில்லை. அணியை ரஷீத் கான் கேப்டனாக வழிநடத்தினார். அந்த போட்டியில் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியான ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நாளைய போட்டியில் விளையாடுவாரா?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்கான பயிற்சியில் ஷுப்மன் கில் ஈடுபட்டதாகவும், நாளைய போட்டியில் விளையாடுவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் இயக்குநர் விக்ரம் சொலங்கி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷுப்மன் கில்லுக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டுள்ளது. அவருடைய விஷயத்தில் நாங்கள் மிகுந்த கவனம் கொடுத்து வருகிறோம். அவர் பயிற்சியில் ஈடுபட்டார். அவர் நன்றாக இருப்பதாக நினைக்கிறோம். நாளை போட்டிக்கு முன்பாக சரியாகிவிடுவார் என நம்புகிறோம் என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com