

சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் ஷெப்பர்ட்டின் அதிவேக அரைசதத்தால் பெங்கரூரு அணி 213 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் சனிக்கிழமை விளையாடுகின்றன. பெங்களூரு மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதனையடுத்து, ஆர்சிபி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி இருவரும் ஆரம்ப முதலே அதிரடியாக ஆடினர். இருவரும் அரைசதம் கடந்து ஆட்டமிழந்தனர். பெத்தேல் 55(33 பந்துகள்), விராட் கோலி 62(33 பந்துகள்) ரன்கள் சேர்த்தனர்.
அடுத்து களம்கண்ட வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க உள்ளே ஷெப்பர்ட் வந்தார். அவரது ஆட்டத்தில் அனல் பறந்தது. 14 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஷெப்பர்ட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் கடந்த வீரர்களில் அவர் 2ஆவது இடம் பெற்றார்.
அப்பட்டியலில் ஜெய்ஸ்வால் முதலிடத்தில் உள்ளார். அவர் 13 பந்துகளில் அரைசதம் கடந்துள்ளார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.