வெளிநாட்டுக்குச் சென்ற வீரர்களை திரும்ப அழைக்கும் ஐபிஎல் அணிகள்..! ஆஸி. வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்!

வெளிநாட்டுக்குச் சென்ற வீரர்களை ஐபிஎல் அணிகள் மீண்டும் இந்தியாவுக்கு வர அழைத்திருப்பது குறித்து...
வெளிநாட்டுக்குச் சென்ற வீரர்களை திரும்ப அழைக்கும் ஐபிஎல் அணிகள்..! ஆஸி. வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்!
Published on
Updated on
1 min read

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதால் வெளிநாட்டுக்குச் சென்ற வீரர்களை ஐபிஎல் அணிகள் மீண்டும் இந்தியாவுக்கு வர அழைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர்ப் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையேயான போர் நேற்றிரவு முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டதால் ஐபிஎல் நிர்வாகம் போட்டிகள் எங்கு நடத்த வேண்டுமென ஆலோசனை நடைபெற்று வருகிறது.

மீதமுள்ள 16 போட்டிகளை சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், ஐபிஎல் அணிகள் வெளிநாட்டுக்குச் சென்ற வீரர்கள், பயிற்சியாளர்களை மீண்டும் இந்தியாவுக்கு வருமாறு அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அநேகமாக ஐபிஎல் போட்டிகள் மே.15ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. .

ஆஸி. வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்

பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், நாதன் எல்லீஸ் மீண்டும் இந்தியா வருவதில் உறுதியாக இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

ஏனெனில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஆஸி. அணி தயாராகி வருகிறது.

ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ், சிஎஸ்கே அணிகள் பிளே ஆஃப்-க்கு தேர்வாகவில்லை. அதனால் அதில் இருக்கும் வீரர்கள் இந்தியாவுக்கு வருவதில் சந்தேகம் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com