
டி20 போட்டிகளில் விராட் கோலியின் சாதனையை கே.எல்.ராகுல் முறியடித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தில்லியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. பிளே ஆஃப் சுற்றுக்கும் தகுதி பெற்றது.
கே.எல்.ராகுல் சாதனை
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் அதிரடியாக விளையாடிய கே.எல்.ராகுல் சதம் விளாசி அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 65 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் சதம் விளாசியதன் மூலம், டி20 போட்டிகளில் கே.எல்.ராகுல் 8,000 ரன்களைக் கடந்து அசத்தினார். இதன் மூலம், விராட் கோலியின் சாதனையையும் அவர் முறியடித்தார்.
இதற்கு முன்பாக டி20 போட்டிகளில் அதிவேகமாக 8 ஆயிரம் ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி தன்வசம் வைத்திருந்தார். அந்த சாதனையை முறியடித்து, டி20 போட்டிகளில் அதிவேகமாக 8 ஆயிரம் ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை கே.எல்.ராகுல் படைத்துள்ளார்.
டி20 போட்டிகளில் 8 ஆயிரம் ரன்களைக் கடக்க விராட் கோலி 243 இன்னிங்ஸ்கள் எடுத்துக்கொண்ட நிலையில், கே.எல்.ராகுல் 224 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.