நாங்கள் இதுவரை எதையும் சாதிக்கவில்லை: பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர்

நாங்கள் இதுவரை எதையும் சாதிக்கவில்லை என பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
நாங்கள் இதுவரை எதையும் சாதிக்கவில்லை: பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர்
படம் | பஞ்சாப் கிங்ஸ் (எக்ஸ்)
Published on
Updated on
2 min read

நாங்கள் இதுவரை எதையும் சாதிக்கவில்லை என பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் 18-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. லக்னௌவில் இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடவுள்ளன.

பிளே ஆஃப் சுற்றுக்கான நான்கு அணிகளும் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன. ஜெய்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தியதன் மூலம், பஞ்சாப் கிங்ஸ் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இன்றையப் போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றாலும், பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இரண்டு இடங்களுக்குள்ளே நீடிக்கும். நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு பஞ்சாப் அணிக்கு பிரகாசமாக உள்ளது.

நாங்கள் எதையும் சாதிக்கவில்லை

நடப்பு ஐபிஎல் தொடரில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்று பஞ்சாப் கிங்ஸ் வலுவாக உள்ள நிலையில், நாங்கள் இதுவரை எதையும் சாதிக்கவில்லை என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ரிக்கி பாண்டிங்
ரிக்கி பாண்டிங்படம் | ஐபிஎல்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பஞ்சாப் கிங்ஸ் அணி உண்மையில் மிகுந்த திறமைவாய்ந்த அணி. அணியில் உள்ள அனைவரும் ஒரே குறிக்கோளை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். இதுவரை நாங்கள் செய்துள்ளது மிகப் பெரிய சாதனைதான். ஆனால், உண்மையில் நாங்கள் எதையும் சாதிக்கவில்லை. பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது முதல் இதனையே வீரர்களிடத்தில் கூறி வருகிறேன். புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் பஞ்சாப் அணி வரவேண்டும் என நினைத்தேன். முதல் இரண்டு இடங்களுக்குள் வந்துவிட்டோம்.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். கடந்த 10 வாரங்களாக அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் அனைத்துத் தருணங்களையும் மகிழ்ச்சியாக அனுபவித்தனர். எங்களுக்கு இன்னும் ஒரு வாரம் மீதமிருக்கிறது.

ஷ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து செயல்படவுள்ளதை நினைத்து ஆர்வமாக இருந்தேன். அதேபோல, ஐபிஎல் ஏலத்தில் அவருக்காக எவ்வளவு நம்மால் செலவு செய்ய முடியும் என்பதில் ஆர்வமாக இருந்தேன். தில்லி அணிக்காக ஷ்ரேயாஸ் விளையாடியபோது, நான் அவருடன் இணைந்து பணியாற்றியது சிறப்பாக இருந்தது. அவரது தலைமையின் கீழ் தில்லி அணி அந்த சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. அணியின் சூழலை ஷ்ரேயாஸ் மிகவும் நன்றாக வைத்துக் கொள்கிறார். அவரை தனிப்பட்ட முறையில் எனக்கு நீண்ட நாள்களாக தெரியும். அவர் மிகவும் சிறந்த மனிதர் என்றார்.

சண்டீகரில் நாளை மறுநாள் (மே 29) நடைபெறவுள்ள குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அல்லது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com