விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான தோல்வி மும்பை அணிக்கான எச்சரிக்கை: ரிக்கல்டான்

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான தோல்வி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை என மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிக்கல்டான் தெரிவித்துள்ளார்.

ரியான் ரிக்கல்டான் - படம் | AP

Published On :

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான தோல்வி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை என மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிக்கல்டான் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியின் மூலம், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் நிறைவு செய்யும் வாய்ப்பை மும்பை இந்தியன்ஸ் அணி தவறவிட்டது. மும்பை அணி 14 போட்டிகளில் 8 வெற்றிகள் பெற்று 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

ரியான் ரிக்கல்டான் கூறுவதென்ன?

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான தோல்வி மும்பை இந்தியன்ஸ் அணிக்கான எச்சரிக்கை எனவும், எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது எனவும் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிக்கல்டான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பஞ்சாப் கிங்ஸ் அணி எங்களைவிட சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றனர். இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை. இந்த போட்டியில் தோற்றுவிட்டதால், எல்லாம் முடிந்துவிட்டது என்றாகாது. உண்மையைக் கூறவேண்டுமென்றால், மும்பை அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஒரு சில இடங்களில் முன்னேற்றம் தேவைப்படுகிறது. எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் திறமை எங்களுக்கு இருக்கிறது. எலிமினேட்டர் போட்டியில் வலுவாக மீண்டு வருவோம்.

நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். முதலில் பேட்டிங் செய்வதில் எங்களுக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை. 200 அல்லது 220 ரன்கள் எடுத்திருந்தால், எதிரணிக்கு சவால் அளிக்கும் விதமாக எங்களது பந்துவீச்சாளர்கள் செயல்பட்டிருப்பார்கள். மும்பை இந்தியன்ஸ் அணி 200 ரன்களுக்கும் அதிகமாக ரன்கள் குவித்து அதிக முறை வெற்றி பெற்றதாகவே வரலாறு கூறுகிறது. முக்கியமான தருணத்தில் விக்கெட்டுகளை இழந்ததால், எங்களால் 200 ரன்களுக்கும் அதிகமாக எடுக்க முடியவில்லை என்றார்.

வருகிற மே 30 ஆம் தேதி நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அல்லது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.