ஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ. 95.43 ஆக நிறைவு!சென்செக்ஸ் 388 புள்ளிகளுடனும், நிஃப்டி 24,500-க்குக் கீழே சரிவு!!
/

அரைசதம் விளாசிய சுரேஷ் குமார்; நெல்லை ராயல் கிங்ஸுக்கு 183 ரன்கள் இலக்கு!

டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் நெல்லை ராயல் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய திருச்சி கிராண்ட் சோழாஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்துள்ளது.

News image

படம் | டிஎன்பிஎல் (எக்ஸ்)

Updated On :11 ஆகஸ்ட் 2026, 6:51 pm IST

டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் நெல்லை ராயல் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய திருச்சி கிராண்ட் சோழாஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்துள்ளது.

டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, திருச்சி கிராண்ட் சோழாஸ் முதலில் விளையாடியது.

அரைசதம் விளாசிய சுரேஷ் குமார்; நெல்லை ராயல் கிங்ஸுக்கு 183 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஜெயராமன் சுரேஷ்குமார் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 32 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ராஜ்குமார் அதிரடியாக 19 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். சஞ்சய் யாதவ் 17 ரன்கள், கே. ராஜ்குமார் 13 ரன்கள் மற்றும் ஜெகதீசன் கௌசிக் 10 ரன்கள் எடுத்தனர்.

நெல்லை ராயல் கிங்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய சச்சின் ரதி 4 ஓவர்களில் 17 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஹரிஷ் இரண்டு விக்கெட்டுகள், இம்மானுவேல் செரியன், சோனு யாதவ் மற்றும் ராமலிங்கம் ரோஹித் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நெல்லை ராயல் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது.

Summary

Batting first in the TNPL cricket match against Nellai Royal Kings, Trichy Grand Cholas scored 182 runs for the loss of 8 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.