ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

சித்தார்த் மகாதேவன் அரைசதம்; சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!

டிஎன்பிஎல் தொடரில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மதுரை பேந்தர்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்துள்ளது.

News image

படம் | டிஎன்பிஎல் (எக்ஸ்)

Updated On :10 ஆகஸ்ட் 2026, 10:11 pm IST

டிஎன்பிஎல் தொடரில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மதுரை பேந்தர்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்துள்ளது.

டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்தில் மதுரை பேந்தர்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்ட்டன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மதுரை பேந்தர்ஸ் அணி முதலில் விளையாடியது.

முதலில் விளையாடிய மதுரை பேந்தர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சித்தார்த் மகாதேவன் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 42 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அதீக் உர் ரஹ்மான் 39 ரன்கள், ராம் குமார் 36 ரன்கள் மற்றும் சரவணன் 19 ரன்கள் எடுத்தனர்.

சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி தரப்பில் எம். பொய்யாமொழி இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முகமது, கார்த்திக் மணிகண்டன், ரஹில் ஷா மற்றும் ராஜேந்திரன் விவேக் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி விளையாடி வருகிறது.

Summary

In the TNPL match against the Salem Spartans, the Madurai Panthers batted first and scored 195 runs for the loss of 8 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.