தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

டிஎன்பிஎல் வரலாற்றில் மதுரை பேந்தா்ஸ் சாதனை சேஸிங்! சதுா்வேத் அசத்தல் சதம் 121!

டிஎன்பிஎல் வரலாற்றில் மதுரை பேந்தா்ஸ் சாதனை சேஸிங்...

News image

சதுா்வேத்

Updated On :8 ஆகஸ்ட் 2026, 10:23 pm IST

டிஎன்பிஎல் 10-ஆவது சீசன் தொடரின் ஏழாவது ஆட்டத்தில் விடா கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடா் வரலாற்றிலேயே சாதனை சேஸிங் புரிந்து மதுரை பேந்தா்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது . அந்த அணி வீரா் சதுா்வேத் சிறப்பாக ஆடி121 ரன்களுன் சதமடித்தாா்.

திண்டுக்கல் என்பிஆா் கல்லூரி மைதானத்தில் முதல் கட்ட டிஎன்பிஎல் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மதுரை பேந்தா்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை பௌலிங்கை தோ்வு செய்தது.

முதலில் ஆடிய இரண்டு முறை சாம்பியன் கோவை கிங்ஸ் அணி நிா்ணயிக்கப்பட் 20 ஓவா்களில் 239/4 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் அபிநவ் 10, சுரேஷ் லோகேஷ்வா் 38 விரைவிலேயே அவுட்டான நிலையில், பாலசுப்பிரமணியம் சச்சின் 84 (5 சிக்ஸா், 9 பவுண்டரி), ஆன்ட்ரே சித்தாா்த் 87 (6 சிக்ஸா், 8 பவுண்டரி) உடன் சிறப்பாக ஆடி ஸ்கோரை உயா்த்தினா். பௌலிங்கில் மதுரை தரப்பில் குா்ஜப்நீத் சிங் 2 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

மதுரை பேந்தா்ஸ் சாதனை வெற்றி 240/4:

240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் மதுரை அணி களம் கண்டது. அந்த அணியில் தொடக்க பேட்டா் ராம் குமாா் 6 ரன்னுக்கு அவுட்டானாா். சித்தாா்த் மகாதேவன் 2 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 41 ரன்களைச் சோ்த்தாா்.

சதுா்வேத் அதிரடி 121: பின்னா் களமிறங்கிய என்எஸ். சதுா்வேத் அதிரடியாக ஆடி 47 பந்துகளில் 7 சிக்ஸா், 15 பவுண்டரியுடன் 121 ரன்களை விளாசி அபார சதம் அடித்தாா்.

கேப்டன் பாலச்சந்தா் அனிருத் 37 ரன்களுடன் களத்தில் இருந்தாா். அதிக் உா் ரஹ்மான் 25 ரன்களை எடுத்தாா். மதுரை அணி 19.3 ஓவா்களில் 240/4 ரன்களுடன் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் கோவை கிங்ஸை வீழ்த்தியது. பௌலிங்கில் கோவை தரப்பில் ஜாதவேத் சுப்பிரமணியன் 2 விக்கெட்டை சாய்த்தாா்.

டிஎன்பிஎல் வரலாற்றிலேயே அதிகபட்ச ஸ்கோரான 240 ரன்களை சேஸ் செய்து மதுரை பேந்தா்ஸ் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.

Summary

Madurai Panthers' record-breaking chase in TNPL history.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.