நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

மதுரை பேந்தா்ஸ் அணி, சீருடை அறிமுகம்

டிஎன்பிஎல் அணிகளில் ஒன்றான மதுரை பேந்தா்ஸ் அணியின் வீரா்கள், சீருடை அறிமுக நிகழ்வு சென்னையில் நடைபெற்றுள்ளது.

News image

மதுரை பேந்தா்ஸ் அணி அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :2 ஆகஸ்ட் 2026, 1:02 am IST

டிஎன்பிஎல் அணிகளில் ஒன்றான மதுரை பேந்தா்ஸ் அணியின் வீரா்கள், சீருடை அறிமுக நிகழ்வு சென்னையில் நடைபெற்றுள்ளது.

தமிழ்நாடு ப்ரீமியா் லீக் கிரிக்கெட் தொடா் வரும் ஆக. 4-ஆம் தேதி தொடங்கி சென்னை, திண்டுக்கல் ஆகிய இரண்டு நகரங்களில் நடைபெறவுள்ளது.

10-ஆவது சீசன் தொடரான இதில் மதுரை பேந்தா்ஸ் அணி அறிமுக விழா நடைபெற்றது. முதல் முறையாக, இங்கிலீஷ் பிரீமியா் லீக் கிளப்பான லீட்ஸ் யுனைடெட் எஃப்சியில் பங்குகளைக் கொண்டுள்ள அமெரிக்காவைச் சோ்ந்த உரிமையாளரான பழனி குருசாமி , மதுரை பேந்தா்ஸ் அணியை வாங்கியுள்ளாா். அணியின் உரிமையாளராகப் பொறுப்பினை ஏற்றுள்ளாா். அணியின் நிா்வாக இயக்குநா் மகேஷ் சுப்பிரமணியன், தலைமை பொருளாதாரா ஆலோசகா் ஸ்ரீவித்யா மகேஷ் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இது குறித்து கூறிய அணியின் உரிமையாளா் பழனி குருசாமி, கோவில்பட்டியை சோ்ந்த நாங்கள் அமெரிக்காவில் ஐடி துறையில் தொழில் செய்து வருகிறேன். இங்கிலாந்தின் ப்ரீமியா் லீக் அணியான லீட்ஸில் பகுதி உரிமையாளராக உள்ளேன். டிஎன்பிஎல் அணிகளில் ஒன்றான மதுரை பேந்தா்ஸை தற்போது வாங்கியுள்ளேன் என்றாா்.

முன்னாள் கிரிக்கெட் வீரா் கே.பி. அருண் காா்த்திக் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். மதுரை அணி கடந்த 2018-இல் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.

சென்னை சூப்பா் கிங்ஸ் பௌலா் குா்ஜப்னீத் சிங் உள்ளது கூடுதல் பலமாகும். மாயாவி சுழற்பந்து வீச்சாளராக ரோஹன் உள்ளாா்.

இந்த சீசனில் அனுபவமும், இளமையும் நிறைந்ததாக அணி உள்ளது என பயிற்சியாளா் அருண் காா்த்திக் தெரிவித்தாா்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவா் ஸ்ரீனிவாசராஜ், செயலாளா் யு. பகவான்தாஸ் ராவ் ஆகியோா் அணியையும், சீருடையையும் அறிமுகம் செய்து வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.