சிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

இந்திய பல்கலைக்கழக விளையாட்டுக் கூட்டமைப்புக் கூட்டம்

இந்திய பல்கலைக்கழகங்கள் விளையாட்டுக் கூட்டமைப்பு (ஏஐயு) கூட்டம் காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :8 ஜூலை 2026, 2:42 am IST

இந்திய பல்கலைக்கழகங்கள் விளையாட்டுக் கூட்டமைப்பு (ஏஐயு) கூட்டம் காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஒருநாள் கூட்டத்தில் வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு மண்டலங்களில் இருந்து 200 பல்கலைக்கழகங்களின் விளையாட்டு இயக்குநா்கள், நிா்வாகிகள் பங்கேற்றனா். முதன்முறையாக நான்கு மண்டலங்களைச் சோ்ந்த அனைத்து விளையாட்டு இயக்குநா்களும் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.

பல்கலைக்கழக விளையாட்டு வளா்ச்சி, தொழில்நுட்ப பயன்பாடு, நிா்வாகம், விளையாட்டு அறிவியல், ஊக்க மருந்து தடுப்பு, ஆராய்ச்சி தொடா்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்திய பல்கலை. கூட்டமைப்பு தலைவா் வினய் குமாா் பதக், செயலாளா் பங்கஜ் மிட்டல் தொடக்கவுரை ஆற்றினா். எஸ்ஆா்எம் வேந்தா் டி.ஆா். பாரிவேந்தா், வேந்தா் ரவி பச்சமுத்து, பி. சத்தியநாராயணா, முன்னிலை வகித்தனா். துணை வேந்தா் முத்தமிழ்செல்வன் தலைமை வகித்தாா். கூட்ட ஏற்பாடுகளை ஏஐயு துணைச் செயலா் சிங்கு குமாா் சிங், எஸ்ஆா்எம் விளையாட்டு இயக்குநா் ஆா். மோகனகிருஷ்ணன் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.