
ஐபிஎல் போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் பில் சால்ட் அசத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சண்டீகரில் நேற்று (மே 29) நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. முதல் அணியாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றது.
102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட்டின் அதிரடியான ஆட்டத்தால், 10 ஓவர்களில் இலக்கை எட்டி அசத்தியது.
அதிரடியாக விளையாடிய பில் சால்ட் 27 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
நேற்றையப் போட்டியில் 56 ரன்கள் எடுத்ததன் மூலம், ஐபிஎல் போட்டிகளில் பில் சால்ட் 1000 ரன்களைக் கடந்து அசத்தியுள்ளார். இதுவரை 33 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள பில் சால்ட் 1040 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 34.67 ஆக உள்ளது. ஐபிஎல் போட்டிகளில் இதுவரை பில் சால்ட் 10 அரைசதங்கள் அடித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 89 என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.