இறுதிப்போட்டியில் மீண்டும் ஆர்சிபியுடன் மோதுவோம்: பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக குவாலிஃபையர் 1 போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து யோசிப்பதை தவிர்க்குமாறு பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
இறுதிப்போட்டியில் மீண்டும் ஆர்சிபியுடன் மோதுவோம்: பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர்
படம் | ஐபிஎல் (எக்ஸ்)
Published on
Updated on
1 min read

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக குவாலிஃபையர் 1 போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து யோசிப்பதை தவிர்க்குமாறு பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சண்டீகரில் நேற்று (மே 29) நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின.

இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், முதல் அணியாக ஆர்சிபி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

தோல்வி குறித்து யோசிக்காதீர்கள்

நடப்பு ஐபிஎல் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான குவாலிஃபையர் 1 போட்டி சிறப்பானதாக அமையவில்லை. ஆர்சிபியின் அபார பந்துவீச்சில் பஞ்சாப் கிங்ஸ் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்த நிலையில், குவாலிஃபையர் 1 போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து யோசிப்பதை தவிர்த்து, குவாலிஃபையர் 2 போட்டிக்கு வீரர்கள் தயாராக வேண்டும் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் குவாலிஃபையர் 1 போட்டி குறித்து அதிகம் யோசிக்காமல், குவாலிஃபையர் 2 போட்டிக்குத் தயாராக வேண்டும். ஆட்டத்தின் முதல் ஓவரை நன்றாக தொடங்கினோம். அதன் பின், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தோம். ஜீரணிப்பதற்கு கடினமாக இருந்தாலும், இந்த தோல்வியை ஏற்றுக்கொண்டு குவாலிஃபையர் 2 போட்டியில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். இறுதிப்போட்டியில் மீண்டும் ஆர்சிபியுடன் மோதுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

குவாலிஃபையர் 2 போட்டி நாளை மறுநாள் (ஜூன் 1) அகமதாபாதில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அல்லது குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்ளவுள்ளது.

குவாலிஃபையர் 2 போட்டியில் வெற்றி பெறும் அணி வருகிற ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாதில் நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com