மும்பை - குஜராத் மோதும் ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் மழை குறுக்கிட்டால் என்னாகும்?

முல்லான்பூரில் நடைபெறும் ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் மழையின் குறுக்கீடு குறித்து...
GT captain Gill and MI capatin hardik at during toss... (pics from BCCI)
ஷுப்மன் கில், ஹார்திக் பாண்டியா. பிசிசிஐ
Published on
Updated on
1 min read

முல்லான்பூரில் நடைபெறும் ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் மழைக் குறுக்கிட்டால் மும்பை அணி வெளியேறுமென்பது அதன் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் போட்டிகள் தொடங்கியுள்ளன. நேற்று நடைபெற்ற குவாலிஃபயர் 1-இல் ஆர்சிபி வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

பஞ்சாபின் முல்லான்பூரில் இன்றிரவு எலிமினேட்டரில் மும்பை இந்தியன்ஸும் குஜராத் டைட்டன்ஸும் மோதுகின்றன.

5 முறை கோப்பை வென்ற மும்பையும் ஒருமுறை கோப்பை வென்ற குஜராத்தும் சமபலத்துடன் இருக்கின்றன.

மழைக்கு வாய்ப்பா?

முல்லான்பூரில் பகல் நேரத்தில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை நெருங்கி மாலையில் 20 டிகிரியாகக் குறையும். அதனால், சில இடங்களில் இடியுடன் கூடிய மழைப் பொழியுமென இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

அதேசமயத்தில், போட்டி நடைபெறும் நேரத்தில் (இரவு 7.30) மழைக்கான வாய்ப்பு இல்லை என அமெரிக்க வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

மழை வந்தால், மும்பை வெளியே!

ஒருவேளை மழைப் பொழிந்தால், அது மும்பைக்கு பாதகமாக அமையும். ஏனெனில் போட்டி ரத்தாகினால் ரிசர்வ் டே இல்லாததால் புள்ளிப் பட்டியலின் அடிப்படையில் 3-ஆம் இடத்தில் இருக்கும் குஜராத் வென்றதாக அறிவிக்கப்படும்.

மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மழை வராமல் இருக்க சமூக வலைதளங்களில் கடவுளை வேண்டிக்கொண்டிருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com