ஐபிஎல் போட்டியின் 32-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 40 ரன்கள் வித்தியாசத்தில் லக்னெள சூப்பர் ஜயன்ட்ûஸ அதன் சொந்த மண்ணிலேயே புதன்கிழமை வென்றது.
முதலில் ராஜஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுக்க, லக்னெள 18 ஓவர்களில் 119 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.
இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் பேட்டர்கள் தடுமாற்றத்துடன் விளையாடியல நிலையில், ரவீந்திர ஜடேஜா மட்டும் கை கொடுத்து ரன்கள் சேர்த்தார். பின்னர் ராஜஸ்தான் பெளலிங்கில் ஜோஃப்ரா ஆர்ச்சர், நாண்ட்ரே பர்கர், பிரிஜேஷ் சர்மா ஆகியோர் அசத்தலாகப் பந்துவீசி, லக்னெள சரித்தனர்.
முன்னதாக டாஸ் வென்ற லக்னெள, பந்துவீசத் தயாரானது. ராஜஸ்தான் இன்னிங்ûஸ தொடங்கியோரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 பவுண்டரிகளுடன் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த துருவ் ஜுரெல் டக் அவுட்டானார்.
அடுத்து கேப்டன் ரியான் பராக் களம் காண, மறுபுறம் சூர்யவன்ஷி 8 ரன்களுக்கு வெளியேறினார். இதனால் 32 ரன்களிலேயே ராஜஸ்தான் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
5-ஆவது பேட்டராக ஷிம்ரன் ஹெட்மயர் வர, கேப்டன் ரியான் பராக் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 20 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து வந்த ரவீந்திர ஜடேஜா அதிரடியாக ரன்கள் சேர்த்தார். ஹெட்மயர் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 22 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டார்.
7-ஆவது பேட்டராக வந்த டோனோவன் ஃபெரெய்ரா 2 பவுண்டரிகளுடன் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஓவர்கள் முடிவில் ஜடேஜா 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 43, ஷுபம் துபே 3 பவுண்டரிகளுடன் 19 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
லக்னெள பெளலிங்கில் முகமது ஷமி, பிரின்ஸ் யாதவ், மோசின் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
பின்னர் 160 ரன்களை நோக்கி விளையாடிய லக்னெள அணியில், தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 55 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது.
நிகோலஸ் பூரன் 3 பவுண்டரிகளுடன் 22, ஹிம்மத் சிங் 1 சிக்ஸருடன் 15 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
ஆயுஷ் பதோனி 0, கேப்டன் ரிஷப் பந்த் 0, எய்டன் மார்க்ரம் 0, முகுல் செளதரி 7, முகமது ஷமி 6, மயங்க் யாதவ் 5, மோசின் கான் 0 ரன்களுக்கு வரிசையாக விக்கெட்டை இழந்தனர்.
முடிவில் திக்வேஷ் ரதி 2 ரன்களுடன் கடைசி வீரராக நின்றார். ராஜஸ்தான் தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 3, நாண்ட்ரே பர்கர், பிரிஜேஷ் சர்மா ஆகியோர் தலா 2, ரவீந்திர ஜடேஜா, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பஞ்சாபுக்கு முதல் தோல்வி: ராஜஸ்தான் வெற்றி

ராஜஸ்தானை வீழ்த்தியது ஹைதராபாத்
இஷான் கிஷண் அதிரடி; பிரஃபுல், சகிப் அபாரம் - ராஜஸ்தானை வென்றது ஹைதராபாத்

சூா்யவன்ஷி, ஜுரெல் விளாசல்; 4-ஆவது வெற்றியுடன் ராஜஸ்தான் ஆதிக்கம்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

