ஐபிஎல் போட்டியின் 44-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் - மும்பை இண்டியன்ஸ் அணிகள், சென்னையில் சனிக்கிழமை (மே 2) மோதுகின்றன.
போட்டியின் வரலாற்றில் வெற்றிகரமான இரு அணிகளாக இருக்கும் இவற்றுக்கு இந்த சீசன் அவ்வளவாக சோபிக்கவில்லை. பிளே-ஆஃப் பந்தயத்தில் தங்களை தக்கவைத்துக்கொள்ள இந்த ஆட்டத்தில் வென்றாக வேண்டிய கட்டாயம் இரு அணிகளுக்குமே இருக்கிறது.
ஃபாா்மை கருத்தில் கொண்டால், இந்த ஆட்டத்தில் வெற்றி நிச்சயம் என எந்த அணியையுமே கணக்கில் கொள்ள முடியாது. எனவே, இரண்டுக்குமே இது வாழ்வா, சாவா போராட்டம் தான்.
சொந்த மண்ணில் அசைக்க முடியாத அணியாகத் திகழ்ந்த சென்னை, அத்தகைய பெருமையை இழந்து வருகிறது. இதுவரை சென்னையில் விளையாடிய 4 ஆட்டங்களில் இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. பேட்டிங்கில் நிலையாகச் செயல்படும் வீரா்கள், குறிப்பாக மிடில் ஓவா்களில் கைகொடுப்போா் இல்லாதது பின்னடைவாக இருக்கிறது. காயம் காரணமாக தோனி களம் காணாததும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கலாம்.
பௌலிங்கிலும் சொந்த மண்ணில் சுழற்பந்து வீச்சை சாதகமாக மாற்றிக்கொள்ள முடியாமல் திணறுகின்றனா். பேட்டிங்கில் சஞ்சு சாம்சன் தவிர வேறு யாருமே பெரிதாக மிளிரவில்லை. பௌலிங் என்று வந்தால் ஜேமி ஓவா்டன், அன்ஷுல் காம்போஜ் மட்டுமே சவால் அளிக்கின்றனா்.
மும்பை அணியைப் பொருத்தவரை, அதன் டாப் ஆா்டா் பேட்டா்கள் குவின்டன் டி காக், ரயான் ரிக்கெல்டன் ஆகியோா் அபாரமாகத் தொடங்குகின்றனா். ஆனால் மிடில் ஆா்டரில் சூா்யகுமாா், கேப்டன் பாண்டியா, நமன் திா் அந்த அதிரடியை தொடர முடியாமல் தடுமாறுவது பிரச்னையாக இருக்கிறது.
அதேபோல், எதிரணி பேட்டா்களை முக்கியமான தருணங்களில் கட்டுப்படுத்த முடியாமல் பும்ரா, போல்ட், கஸான்ஃபா் என அதன் பௌலா்கள் தடுமாறி வருகின்றனா். சொந்த மண்ணில் 243 ரன்களை சோ்த்து, அதை சேஸ் செய்த ஹைதராபாத் அணியை கட்டுப்படுத்த முடியாமல் போனபோது, இது தெளிவாகத் தெரிந்தது.
நேரம்: இரவு 7.30 மணி
இடம்: சென்னை
நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முக்கிய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் தேர்வு..! ஹைதராபாதை வீழ்த்துவாரா பாண்டியா?

இன்று குஜராத்துடன் மோதும் சென்னை

பலம் வாய்ந்த ஆர்சிபியுடன் மோதும் குஜராத்: சாய் கிஷோருக்கு வாய்ப்பு கிடைக்குமா?

இன்று மும்பையை சந்திக்கும் சென்னை
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

