ஐபிஎல் 41ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. மிகவும் முக்கியமான இந்தப் போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்திலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 4ஆவது இடத்திலும் இருக்கின்றன.
மும்பை வானகடேவில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. ஏற்கெனவே, மும்பை அணி வான்கடேவில் அதிகமான போட்டிகளில் தோல்வியுற்றதால், ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.
சன்ரைசர்ஸ் இந்தப் போட்டியில் வென்றால், 12 புள்ளிகளுடன் டாப் 3க்குள் நுழைந்துவிடும். அடுத்து 2 போட்டிகளில் வென்றால் பிளே ஆஃப்ஸ் உறுதியாகிவிடும் நிலையில், மற்ற அணிகளுக்கும் இந்தப் போட்டி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இந்தப் போட்டி முக்கியமானதாக இருக்கிறது. இதுவரை 7ல் 2ல் மட்டுமே வெற்றி பெற்று, 5ல் தோல்வியுற்றுள்ளது.
மீதமுள்ள 7ல் 6ல் வெற்றிபெற வேண்டியுள்ளதால், இந்தப் போட்டியில் தோல்வியுற்றால் அடுத்து அனைத்து போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுமென்பதும் குறிப்பிடத்தக்கது.
அணியில் சில மாற்றங்களை செய்துள்ளதாக ஹார்திக் பாண்டியா கூறியுள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஒரேயொரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளதாக பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ்: ரியான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், நமன்திர், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, ராபின் மின்ஸ், டிரெண்ட் போல்ட், ஜஸ்ப்ரீத் பும்ரா, அல்லா கஷன்ஃபர், அஷ்வனி குமார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசன், சலில் அரோரா, நிதிஷ் குமார் ரெட்டி, பாட் கம்மின்ஸ், ஹர்ஷ் துபே, சாகிப் ஹுசைன், பிரஃபுல் ஹிங்கே, இஷான் மலிங்கா.
Summary
Mumbai Indians opt to bat in crucial match! Will Pandya defeat Hyderabad?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடப்பு ஐபிஎல் சீசன் பாதியிலேயே மும்பை அணியிலிருந்து விலக முடிவெடுத்த ஹார்திக் பாண்டியா?

07:07... ஹார்திக் பாண்டியாவின் வைரல் பதிவு..! சிஎஸ்கேவுக்கு வருகிறாரா?

ஹார்திக் பாண்டியா வருகை: கொல்கத்தா பந்துவீச்சு; மும்பை பேட்டிங்!







