ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை (மே 20) தொடங்கும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் தொடர் இந்தியா முழுவதும் உள்ள 14 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மும்பை, லக்னௌ அணிகள் தொடரில் இருந்து வெளியேறிவிட்டன.
நடப்பு சாம்பியனான பெங்களூரு அணி முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், இரண்டாவது அணியாக ஹைதராபாத் அணி தேர்வாகியிருக்கிறது.
மூன்றாவது மற்றும் நான்காவது இடத்துக்கு பஞ்சாப், குஜராத் அணிகள் கடுமையாக மோதும் நிலையில், நேற்றிரவு நடைபெற்ற ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவியதன் மூலம் சென்னை அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு மங்கியிருக்கிறது.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் சுற்றுக்கான டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்புகளை பிசிசிஐ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
பிளே-ஆஃப் தொடருக்கான டிக்கெட்டுகள் நாளை இரவு 7 மணிக்குத் தொடங்கும் என்றும், டிஸ்ட்ரிக் செயலி மூலமாக டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குவாலிஃபையர் 1 போட்டி – மே 26 ஆம் தேதி தரம்சலாவிலும், எலிமினேட்டர் 1 போட்டி மே 27 ஆம் தேதி நியூ சண்டீகரிலும் நடைபெறுகிறது.
குவாலிஃபையர் 1, எலிமினேட்டர் 1 போட்டிக்கான டிக்கெட்டுகள் வரும் 20, 21 ஆம் தேதிகளிலும், குவாலிஃபையர் 2, இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகள் 22, 23 ஆம் தேதிகளில் https://www.iplt20.com உள்ளிட்ட தளங்களில் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
The Board of Control for Cricket in India (BCCI) on Monday announced the ticket sale schedule for the TATA Indian Premier League (IPL) 2026 Playoffs.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









