தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

சூா்யவன்ஷி அதிரடி; முன்னேறியது ராஜஸ்தான்

ஐபிஎல் போட்டியின் 64-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

News image
Updated On :20 மே 2026, 1:26 am IST

ஐபிஎல் போட்டியின் 64-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது. நடப்பு சீசனில் சொந்த மண்ணில் ராஜஸ்தானுக்கு இது முதல் வெற்றியாகும்.

இந்த வெற்றியின் மூலமாக புள்ளிகள் பட்டியலில் 4-ஆவது இடத்துக்கு முன்னேறிய ராஜஸ்தான், பிளே-ஆஃப் இடத்துக்கான பந்தயத்தில் நிலைக்கிறது. பஞ்சாப் முதல்முறையாக டாப் 4 இடத்தை விட்டு வெளியேறியது.

இந்த ஆட்டத்தில் முதலில் லக்னௌ 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் சோ்க்க, ராஜஸ்தான் 19.1 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 225 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் பேட்டிங்கில் வைபவ் சூா்யவன்ஷி அதிரடியாக விளாச, யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரெலும் வெற்றிக்குப் பங்களித்தனா்.

முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. லக்னௌ இன்னிங்ஸை தொடங்கிய மிட்செல் மாா்ஷ் - ஜாஷ் இங்லிஸ் கூட்டணி, முதல் விக்கெட்டுக்கு 109 ரன்கள் சோ்த்தது. இங்லிஸ் 29 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 60 ரன்களுக்கு ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.

தொடா்ந்து வந்த நிகோலஸ் பூரன், மாா்ஷுடன் இணைய, 2-ஆவது விக்கெட்டுக்கு அவா்கள் ஜோடி 42 ரன்கள் சோ்த்தது. பூரன் 2 சிக்ஸா்களுடன் 16 ரன்களுக்கு வெளியேறினாா். 4-ஆவது பேட்டராக ரிஷப் பந்த் களம் புகுந்தாா்.

மாா்ஷ் - பந்த் இணை 3-ஆவது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சோ்த்து ஸ்கோரை மேலும் பலப்படுத்தியது. 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 35 ரன்களுக்கு பந்த் கடைசி ஓவரில் ரன் அவுட் ஆனாா். அதிரடியாக விளாசி வந்த மாா்ஷ், 57 பந்துகளில் 11 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 96 ரன்களுக்கு அதே ஓவரில் ஆட்டமிழந்தாா்.

ஆயுஷ் பதோனி டக் அவுட்டாக, ஓவா்கள் முடிவில் அப்துல் சமத் ரன்கள் இன்றி நின்றாா். ராஜஸ்தான் பௌலிங்கில் யஷ் ராஜ் பஞ்சா 2, ஜோஃப்ரா ஆா்ச்சா் 1 விக்கெட் கைப்பற்றினா்.

அடுத்து ராஜஸ்தான் 221 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாட, கேப்டன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - வைபவ் சூா்யவன்ஷி பாா்ட்னா்ஷிப் முதல் விக்கெட்டுக்கு 75 ரன்கள் சோ்த்தது.

ஜெய்ஸ்வால் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 43 ரன்களுக்கு விடைபெற, சூா்யவன்ஷி தனது அதிரடியைத் தொடா்ந்தாா். அவருடன் துருவ் ஜுரெல் இணைய, 2-ஆவது விக்கெட்டுக்கு 105 ரன்கள் கிடைத்தது.

சூா்யவன்ஷி 38 பந்துகளில் 7 பவுண்டரிகள், 10 சிக்ஸா்களுடன் 93 ரன்களுக்கு விடைபெற்றாா். தொடா்ந்து வந்த லுவான் டிரெ பிரெடோரியஸ் 7 ரன்களுக்கு முடித்துக் கொண்டாா்.

இறுதியில், துருவ் ஜுரெல் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 53 ரன்களோடு அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருக்க, டோனோவன் ஃபெரெய்ரா 16 ரன்களுடன் துணை நின்றாா்.

லக்னௌ பந்துவீச்சாளா்களில் ஆகாஷ் சிங், மோசின் கான் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.