கேப்டன் மார்கன் விளாசல்: கொல்கத்தா 191 ரன்கள் குவிப்பு

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் குவித்துள்ளது.
கேப்டன் மார்கன் விளாசல்: கொல்கத்தா 191 ரன்கள் குவிப்பு


ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் குவித்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் 54-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

கொல்கத்தா தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில் மற்றும் நிதிஷ் ராணா களமிறங்கினர். ராணா முதல் பந்திலேயே ஜோப்ரா ஆர்ச்சரிடம் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனால், ரன் வேகம் வெதுவாக இருந்தது. முதல் 3 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே எடுத்தது கொல்கத்தா. ஷ்ரேயஸ் கோபால் வீசிய 4-வது ஓவரில் ஷுப்மன் கில் 2 பவுண்டரிகளையும், ராகுல் திரிபாதி 2 பவுண்டரிகளையும் அடிக்க ரன் ரேட் உயர்ந்தது.

இதன்பிறகு, இது சிறப்பான பாட்னர்ஷிப்பாக இருந்தது. தொடக்கத்திலேயே விக்கெட் விழுந்ததால், பாட்னர்ஷிப்பை கட்டமைத்தனர். பெரிய இன்னிங்ஸாக மாற்ற வேண்டிய தருணத்தில் கில் 36 ரன்களுக்கு தெவாதியா பந்தில் ஆட்டமிழந்தார். அதேஓவரில் நரைன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். திரிபாதியும் பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் 39 ரன்களுக்கு ஷ்ரேயஸ் கோபால் பந்தில் ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் தெவாதியா பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால், நடு ஓவர்களில் தடுமாற்றம் ஏற்பட்டது. எனினும் கேப்டன் இயான் மார்கன் மற்றும் ஆண்ட்ரே ரஸல் அதிரடியான பாட்னர்ஷிப்பை அமைத்தனர்.

ஷ்ரேயஸ் கோபால் வீசிய 14-வது ஓவரில் மார்கன் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடிக்க 21 ரன்கள் கிடைத்தன. இதையடுத்து, ஆர்ச்சர் பந்தில் பவுண்டரியும், சிக்ஸரும் அடித்த ரஸலும் அதிரடியில் இணைந்தார். கார்த்திக் தியாகி வீசிய 16-வது ஓவரின் முதல் 2 பந்துகளில் சிக்ஸர் அடித்து மிரட்டிய ரஸல் அடுத்த பந்திலேயே ஆட்டமிழக்கவும் செய்தார்.

எனினும், மார்கன் நம்பிக்கையுடன் களத்தில் இருந்தார். பென் ஸ்டோக்ஸ் வீசிய 19-வது ஓவரில் கம்மின்ஸ் 1 சிக்ஸரும், மார்கன் 2 சிக்ஸர்கள் 1 பவுண்டரியும் அடிக்க 24 ரன்கள் கிடைத்தன. கடைசி ஓவரின் கடைசி பந்தில் மார்கன் இமாலய சிக்ஸர் அடித்து இன்னிங்ஸை முடித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்கன் 35 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com