கோப்புப்படம்
கோப்புப்படம்

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் மேலும் 29 பேருக்கு கரோனா தொற்று

ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 382ஆக அதிகரித்துள்ளது.
Published on

ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 382ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி நடைபெற கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்துவருவதால் அந்நாட்டு அரசு தவித்து வருகிறது. 

இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள 29 பேருக்கு புதிதாக கரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனினும் ஓட்டப்பந்தய வீரர்கள் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் கடந்த ஜூலை 1 முதலான கரோனா பாதிப்பு 382ஆக அதிகரித்துள்ளது. 

முன்னதாக ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருவதற்கு மத்தியில் ஜப்பானில் மேலும் 4 நகரங்களுக்கு கரோனா அவசரநிலை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com