காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

தமிழகத்தில் புதிதாக 1,985 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 1,985 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 3:02 pm

DIN

தமிழகத்தில் புதிதாக 1,985 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மக்கள்நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாநிலத்தில் இதுவரை 3.83 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 25 லட்சத்து 71,383 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக கோவையில் 239 பேருக்கும், சென்னையில் 189 பேருக்கும், ஈரோட்டில் 178 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே, மேலும் 1,908 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். 

இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 16,938-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 20,185 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 30 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,260-ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்தே வருகிறது.  குறிப்பாக கோவை, சென்னை, ஈரோடு, கடலூா், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு விகிதம் சற்று ஏறுமுகமாகவே உள்ளது. பாதிப்பு அதிகரித்து வரும் மாவட்டங்களில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக மக்கள் நலவாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.