நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

டிவிட்டரில் ’தல’ தோனிக்கு மீண்டும் 'ப்ளூ டிக்'

கிரிக்கெட் வீரர் தோனியின் ட்விட்டர் கணக்கில் ப்ளூ டிக் மீண்டும் சேர்க்கப்பட்டது.

News image

டிவிட்டரில் தோனிக்கு மீண்டும் ப்ளூ டிக்

Updated On :6 ஆகஸ்ட் 2021, 2:06 pm

DIN

கிரிக்கெட் வீரர் தோனியின் ட்விட்டர் கணக்கில் ப்ளூ டிக் மீண்டும் சேர்க்கப்பட்டது.

ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் அதிக பிந்தொடர்பவர்களைக் கொண்ட பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளுக்கு ப்ளூ டிக் வழங்கப்படுவது வழக்கம். அதுபோல இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ட்விட்டர் கணக்குக்கும் ப்ளூ டிக் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை தோனியின் ட்விட்டர் கணக்கில் இருந்த ப்ளூ டிக்கை டிவிட்டர் நிறுவனம் நீக்கியது. இது சர்ச்சையைக் கிளப்பியது.

இதுகுறித்து விளக்கமளித்த டிவிட்டர் நிறுவனம் தோனியின் டிவிட்டர் கணக்கானது நீண்டநாள் பயன்பாட்டில் இல்லாததால் ப்ளூ டிக் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தோனியின் டிவிட்டர் கணக்கில் மீண்டும் ப்ளூ டிக்  இணைக்கப்பட்டுள்ளது. 

டிவிட்டர் சரிபார்ப்பு கொள்கையின்படி டிவிட்டர் கணக்கு செயலற்றதாகவோ அல்லது பயன்படுத்தப்படாமலலோ இருந்தால் தானாகவே ப்ளூ டிக் நீக்கப்பட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.