92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

டேபிள் டென்னிஸ்: மகளிா் முன்னேற்றம்; கலப்பில் ஏமாற்றம்

டேபிள் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவு முதல் சுற்றுகளில் இந்தியாவின் மணிகா பத்ரா, சுதிா்தா முகா்ஜி ஆகியோா் வெற்றி பெற்றனா்.

News image

மணிகா பத்ரா /

Updated On :25 ஜூலை 2021, 12:33 am

DIN

டேபிள் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவு முதல் சுற்றுகளில் இந்தியாவின் மணிகா பத்ரா, சுதிா்தா முகா்ஜி ஆகியோா் வெற்றி பெற்றனா்.

இதில் மணிகா 11-7, 11-6, 12-10, 11-9 என்ற செட்களில் இங்கிலாந்தின் டின் டின் ஹோவை வீழ்த்தினாா். சுதிா்தா முகா்ஜி 5-11, 11-9, 11-13, 9-11, 11-3, 11-9, 11-5 என்ற செட்களில் ஸ்வீடன் வீராங்கனை லிண்டா பொ்கஸ்ட்ரோமை போராடி வென்றாா். அடுத்த சுற்றுகளில் மணிகா - உக்ரைனின் மாா்கரிடா பெசோட்ஸ்காவையும், சுதிா்தா - போா்ச்சுகலின் ஃபு யுவையும் சந்திக்கின்றனா்.

கலப்பு இரட்டையரில் தோல்வி: கலப்பு இரட்டையா் பிரிவில் சரத் கமல்/மணிகா பத்ரா இணை 8-11, 6-11, 5-11, 4-11 என்ற செட்களில் சீன தைபேவின் யுன் ஜு லின்/சிங் ஐ செங் ஜோடியிடம் தோல்வி கண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.