டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக பளுதூக்குதல் போட்டியில் 49கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்ட மீராபாய் சானு இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்தியாவிற்கு கிடைத்த முதல் பதக்கமும் அதுதான் என்பதால் பல்வேறு தரப்பினரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்தனர் .
நாடு திரும்பிய மீராபாய் சானு இந்திய இரயில்வேத்துறை ஊழியர் என்பதால் அதன் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவை நேரில் சந்தித்தார்.
சந்திப்பிற்கு பின் அமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில் " மீராபாய் சானு இந்திய ரயில்வே துறைக்காக விளையாடியவர். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றதால் அவருக்கு 2 கோடி ரூபாய் பரிசுத்தொகையும் , பதவி உயர்வும் வழங்கப்பட இருக்கிறது " எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுவா் ஏறிக் குதித்து வளா்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை

நடுகூடலூா் பகுதிக்கு முறையாக குடிநீா் வழங்க வலியுறுத்தல்

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயில் சித்திரைத் தேரோட்டம்

கோபி அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு தானம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


