4 x 400 மீ. கலப்பு தொடர் ஓட்டம்: ரேவதி, சுபா பங்கேற்ற இந்திய அணி தோல்வி

ரேவதி, சுபா ஆகிய இரு தமிழர்களும் கலந்துகொண்ட 4 x 400 மீ. கலப்பு தொடர் ஓட்டத்தின் தகுதிச்சுற்றில்...
4 x 400 மீ. கலப்பு தொடர் ஓட்டம்: ரேவதி, சுபா பங்கேற்ற இந்திய அணி தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் ரேவதி, சுபா ஆகிய இரு தமிழர்களும் கலந்துகொண்ட 4 x 400 மீ. கலப்பு தொடர் ஓட்டத்தின் தகுதிச்சுற்றில் இந்திய அணி கடைசி இடத்தைப் பிடித்து தோல்வியடைந்துள்ளது.

4 x 400 மீ. கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியா சார்பாக அலெக்ஸ் ஆந்தனி, சர்தக் பாம்ப்ரி, ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டார்கள். இவர்களில் ரேவதி, சுபா ஆகிய இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ரேவதி, மதுரை மாவட்டம் சக்கிமங்கலத்தைச் சேர்ந்தவர். திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகவதிபுரத்தை சேர்ந்தவர் சுபா. 

இந்நிலையில் இந்தத் தகுதிச்சுற்றில் (ஹீட் 2) இந்திய அணி 3:19:93 நிமிடத்தில் 4 x 400 மீ. தூரத்தைக் கடந்து கடைசி இடத்தைப் பிடித்தது. தகுதிச்சுற்றில் கலந்துகொண்ட ஒட்டுமொத்த அணிகளில் 13-ம் இடம். இதனால் 4 x 400 மீ. கலப்பு தொடர் ஓட்டத்தின் இறுதிச்சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெறவில்லை.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com