
பாரீஸ் ஒலிம்பிக்கில் வில்வித்தை கலப்பு அணியில் இந்திய அணி அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளது.
வில்வித்தை கலப்பு அணியில் தீரஜ் பொம்மதேவரா/ அங்கிதா பகத் இணைமதியம் நடைபெற்ற 1/8 வெளியேறும் சுற்றில் வெற்றி பெற்று காலிருதிக்கு தகுதி பெற்றனர்.
இதுவரை இந்திய அணி 3 வெண்கலப் பதங்கங்களை வென்றுள்ளன.
தற்போது நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் தீரஜ் பொம்மதேவரா/ அங்கிதா பகத் ஸ்பெயின் வீரர்களை எதிர்கொண்டு 5-3 என ஸ்கோர் செய்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளார்கள்.
இன்று இரவு 7.01 மணிக்கு இத்தாலி அல்லது தென் கொரிய அணியுடன் பலப்பரீட்சையில் மோதுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.