சாவடிச்சிருவேன்: வீரரை திட்டிய அஸ்வின் செயலுக்கு கடும் விமர்சனங்கள்!

டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் அஸ்வின் சக வீரரை திட்டிய விடியோ பேசுபொருளாகியுள்ளது.
வீரரை திட்டிய அஸ்வின்
வீரரை திட்டிய அஸ்வின் படங்கள்: எக்ஸ்
Published on
Updated on
1 min read

டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் அஸ்வின் சகவீரரை திட்டிய விடியோ பேசுபொருளாகியுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பா் கில்லீஸ் 20 ஓவர் முடிவில் 158/6 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக பாபா அபரஜித் 72, ஜெகதீஷன் 25, அபிஷேக் தன்வர் 22 ரன்களும் எடுத்தார்கள்.

அடுத்து விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் அஸ்வின் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் அரைசதமடித்து 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

வீரரை திட்டிய அஸ்வின்
தோனிதான் காரணம்: டிரெண்டுக்கு பதிலளித்த எம்.எஸ்.தோனி!

இந்த எலிமினேட்டர் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வீரர் சரத்குமார் 17ஆவது ஓவரில் விக்கெட்டில் இருந்து தப்பித்தபோது அஸ்வின், “ஒழுங்காக விளையாடு, சாவடிச்சிருவேன். இல்லைனா அப்படியே போய்டு” என கோபமாக வீரரை நோக்கி திட்டுவார்.

இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைராலகியுள்ளன. சிலர் விராட் கோலியுடன் ஒப்பிட்டு இதெல்லாம் தேவையா அஸ்வின் எனவும் கூறுகிறார்கள்.

அஸ்வின் செயல் மிகவும் கேவலமானது என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஐபிஎல் விளையாட்டு வீரர்களை இப்படி திட்ட முடியுமா, ஏன் இவ்வளவு ஆணவம்? என விமர்சித்து வருகிறார்கள்.

இன்று குவாலிஃபயர் 2 போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ், ஐ ட்ரீம் திருப்பூ தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com