
43 வயதாகும் தோனி இந்திய அணிக்கு 3 விதமான ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளார். சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றுள்ள தோனி ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார்.
கடந்த ஐபிஎல் தொடரில் இருந்து கேப்டன் பொறுப்பையும் விட்டுக்கொடுத்தார். தற்போது ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக இருக்கிறார்.
தோனி ரசிகர்கள், சமூக வலைதளத்தில் தல ஃபார் ஏ ரீசன் ( ) என்ற ஹேஸ்டேக்கை கடந்த ஐபிஎல் (2024) முதல் டிரெண்டாக்கினார்கள்.
எப்படியாகினும் 7 என்கிற எண் வந்துவிட்டால் அதற்கு தல தோனிதான் காரணம் என அன்போடு சமூக வலைதளங்களில் பதிவிடுவார்கள்.
சமீபத்தில் கம்பீர் தலைமையேற்று வென்ற முதல்போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதற்கும் 4+3 = 7 தோனிதான் காரணமென விளையாட்டாக பதிவிட்டார்கள் தோனி ரசிகர்கள்.
இதற்கு சமீபத்தில் ருதுராஜ் கெய்க்வாட்டும் தோனிதான் காரணமென ஒரு பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தோனி இது குறித்து கூறியதாவது:
எனக்கு இந்த டிரெண்ட் இருக்கிறதென்றே தெரியாது. இன்ஸ்டாகிராம் வழியாகத்தான் அறிந்துகொண்டேன். எனது ரசிகர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். நான் சமூக வலைதளங்களில் எதுவும் எனக்காக பேசுவதில்லை. எதுவாக இருந்தாலும் நான் சமூக வலைதளங்களில் கருத்து கூறு தேவைப்பட்டதில்லை. அப்படி தேவையிருக்கும் பட்சத்தில் எனது ரசிகர்களே செய்துவிடுவார்கள். தேவையானபோது அவர்களே என்னை புகழவும் செய்வார்கள்.
அதனால் நான் எதுவும் செய்யவேண்டியதில்லை. நான் சமூக வலைதளங்களில் பெரிதாக பயன்படுத்தாவிட்டாலும் என் பதிவுகளுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அது அவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.