
மகாராஷ்டிர மாநிலம் கம்பல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் 29 வயதான ஸ்வப்னில். 2012 முதல் சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார்.
தற்போது இந்தியாவின் சார்பாக 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் ஆடவர் தகுதிச் சுற்றில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஸ்வப்னிலுக்கும் தோனிக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. தோனி இரயில்வேயில் பணியாற்றி மிகப்பெரிய கிரிக்கெட்டராக மாறினார். அதேபோல் ஸ்வப்னிலும் 2015இல் இரயில்வேயில் டிக்கெட் கலெக்டராக பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்காக எம்.எஸ்.தோனி 3 விதமான ஐசிசி உலகக் கோப்பைகளை வென்றுள்ளார்.
இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் தோனிக்கு ரசிகர்கள் கூட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது. தோனியின் கேப்டன்சி (தலைமைப் பண்பு) அவரின் நடத்தைகள் உலக அளவில் கவனம் பெற்றுள்ளன.
மிகவும் பொறுமையாக இருப்பதும் அமைதியாக இருப்பதும் துப்பாக்கி சுடுதலில் மிகவும் முக்கியமானது. தோனியும் அதில்தான் சிறப்பானவர்.
இந்நிலையில் இறுதிச் சுற்றுக்கு தேர்வான ஸ்வப்னில் பிடிஐக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
துப்பாக்கி சுடுதலில் நான் யாரையும் தனிப்பட்ட முறையில் பின்பற்றமாட்டேன். ஆனால் அதையும் தாண்டி, எனக்கு தோனி என்றால் மிகவும் பிடிக்கும். எனது விளையாட்டில் அமைதியையும் பொறுமையையும் மிகவும் தேவைப்படும் அது தோனி களத்தில் இருப்பதைப் போலவே இருக்கும். மேலும் நானும் ஒரு டிக்கெட் கலெக்டராக இருந்ததால் அதையும் தோனியுடன் தொடர்புபடுத்திக் கொள்கிறேன்.
ஒவ்வொரு முறை சுடுவதும் புதியதுதான். சுடும்போது பொறுமையாக இருக்க முயற்சிக்கிறேன். போட்டி முழுவதும் இதே மனநிலையில் இருக்க விரும்புகிறேன். அமைதியாக சுடுவதில் கவனம் செலுத்துகிறேன். மனதில் எவ்வளவு புள்ளிகள் என்ற யோசனை இருந்தாலும் அதை கவனிக்காமல் இருப்பது நல்லது.
மானு பாக்கர் சிறப்பாக விளையாடினார். அவரால் முடியும்போது எங்களாலும் முடியுமென நினைக்கிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.