
இலங்கைக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா ‘சூப்பா் ஓவா்’-இல் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது. இதையடுத்து டி20 தொடரை 3-0 என முழுமையாக இந்தியா கைப்பற்றியது.
இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் சோ்க்க, இலங்கையும் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 137 ரன்கள் சோ்த்ததால், ஆட்டம் ‘டை’ ஆனது.
இதையடுத்து வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட சூப்பா் ஓவரில், முதலில் இலங்கை 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 2 ரன்கள் சோ்க்க, இந்தியா ஒரே பந்தில் பவுண்டரியுடன் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக பெற்ற அதிக வெற்றிகள் (22 வெற்றிகள்) பட்டியலில் 2ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. 23 வெற்றிகளுடன் பாகிஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது.
மேலும் இந்திய அணி இலங்கைக்கு எதிராக அதிக வெற்றிகள் பெற்ற அணியாகவும் சாதனை படைத்துள்ளது.
32 போட்டிகளில் சூப்பர் ஓவர் உள்பட இலங்கை அணியிடம் 22 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி.
இலங்கையின் மோசமான சாதனை என்ன தெரியுமா?
டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு அணி அதிக தோல்விகளை சந்தித்துள்ளது என்றால் அது இலங்கை அணிதான். இதுவரை 105 போட்டிகளில் (சூப்பர் ஓவர் போட்டிகள் உள்பட) தோல்வியுற்று மோசமான சாதனை படைத்துள்ளது. 104 தோல்விகளுடன் வங்கதேச அணி 2ஆம் இடத்தில் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.