ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த ஜோ ரூட்! டாப் 10இல் 3 இந்தியர்கள்!

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.
ஜோ ரூட்
ஜோ ரூட்படம்: ஐசிசி / எக்ஸ்
Published on
Updated on
1 min read

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

இங்கிலாந்தின் முன்னாள் டெஸ்ட் கேப்டனும் நட்சத்திர வீரருமான ஜோ ரூட் 143 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12,027 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 32 சதங்கள், 5 இரட்டை சதங்கள், 63 அரை சதங்கள் அடங்கும்.

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 3-0 என அபார வெற்றி பெற்றது. இந்தத் தொடரில் ஜோ ரூட் சிறப்பாக விளையாடினார். இதன் மூலம் ஐசிசியின் டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் ஜோ ரூட் முதலிடம் பிடித்துள்ளார்.

ஜோ ரூட்
ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள்: மானு பாக்கர் புதிய சாதனை

இதற்கு முன்பு 2015 ஆகஸ்ட் மாதத்தில் ஜோ ரூட் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

முதலிடத்தில் இருந்த கேன் வில்லியம்சன் 2ஆம் இடமும் 3,4,5ஆம் இடங்களில் முறையே பாபர் அசாம், டேரில் மிட்செல், ஸ்டீவ் ஸ்மித் இருக்கிறார்கள்.

டாப் 10இல் 3 இந்திய பேட்டர்கள் இடம் பிடித்துள்ளார்கள். நட்சத்திர வீரர்களான ரோஹித் 6ஆவது இடமும் ஜெய்ஸ்வால் 8ஆவது இடமும் விராட் கோலி 10ஆவது இடமும் பிடித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com