
ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியின் இறுதிப் போட்டியில் பங்கேற்கவிருந்த வினேஷ் போகத், 100 கிராம் கூடுதல் எடையுடன் இருப்பதாகக் கூறி, ஒலிம்பிக் அமைப்பு அவரை தகுதி நீக்கம் செய்திருப்பதாக இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளன.
இந்தியாவின் சார்பாக 50 கி. எடைப் பிரிவில் மல்யுத்தப் போட்டியில் இறுதிக்கு முன்னேறிய முதல் வீராங்கனையாக வினேஷ் போகத் இருந்தார்.
தங்கம் கிடைக்குமென பெரிதும் எதிர்பார்த்திருந்த வினேஷ் போகத்துக்கு இப்படி நிகழ்ந்தது குறித்து பலரும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
இந்நிலையில் பாஜக எம்பியும் முன்னாள் நடிகையுமான ஹேமா மாலினி கூறியது சர்சையாகியுள்ளது.
"100 கிராம் அதிகமாக இருந்ததால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் பெற்றது ஆச்சரியமாகவும் வினோதமாகவும் இருக்கிறது. சரியான எடையில் வைத்துக்கொள்வது முக்கியமானது. இது அனைவருக்குமான பாடம். விரைவில் 100 கிராம் எடையை குறைப்பாரென எதிர்பார்க்கிறேன். ஆனால், வினேஷ் போகத்துக்கு வாய்ப்பு கிடைக்காது” என ஹேமா மாலினி கூறியுள்ளார்.
இந்தக் கருத்துக்கு ஹேமா மாலினியை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.