நீங்கள் எப்போதும் சாம்பியன்தான்: வினேஷ் போகத்துக்கு பி.வி.சிந்து புகழாரம்!

பாரீஸ் ஒலிம்பிக்கில் தகுதிநீக்க பெற்ற வினேஷ் போகத்துக்கு பி.வி.சிந்து ஆதரவாக பதிவிட்டுள்ளார்.
வினேஷ் போகாட், பி.வி.சிந்து
வினேஷ் போகாட், பி.வி.சிந்து
Published on
Updated on
1 min read

ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியின் இறுதிப் போட்டியில் பங்கேற்கவிருந்த வினேஷ் போகத், 100 கிராம் கூடுதல் எடையுடன் இருப்பதாகக் கூறி, ஒலிம்பிக் அமைப்பு அவரை தகுதி நீக்கம் செய்திருப்பதாக இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளன.

இந்தியாவுக்கு தங்கம் கிடைக்குமென பெரிதும் எதிர்பார்த்திருந்த வினேஷ் போகத்துக்கு இப்படி நிகழ்ந்தது குறித்து பலரும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

தலைவர்கள் விளையாட்டு வீரர்கள் பலரும் வினேஷ் போகத்துக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

வினேஷ் போகாட், பி.வி.சிந்து
13 மாதங்களுக்குப் பிறகு டெஸ்ட் அணிக்கு திரும்பிய வேகப் பந்து வீச்சாளர்!

இந்நிலையில் பி.வி.சிந்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

டியர் வினேஷ் போகத், எங்கள் கண்களுக்கு நீங்கள் எப்போதும் சாம்பியன்தான். நீங்கள் தங்கம் வெல்ல வேண்டுமென நான் மிகவும் நம்பியிருந்தேன். பிடிசிஎஸ்இ பயிற்சி மையத்தில் உங்களுடன் சிறிது நேரம் செலவிட்டிருக்கிறேன். ஒரு பெண் சூப்பர்ஹியூமன் ( மனித ஆற்றலுக்கு மேற்பட்ட) சக்தி உடன் சண்டையிடுவதைப் பார்க்க முடிந்தது. அது மிகவும் உற்சாகத்தை கொடுத்தது. நான் உங்களுக்காக எப்போதும் இருப்பேன். இந்த பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த நல்லவற்றையும் உங்களது வழிக்கு அனுப்பி வைக்கிறேன் என்றார்.

இந்த ஒலிம்பிக்கில் பெரிதும் எதிர்பார்த்த பி.வி.சிந்தும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com