
வங்கதேசத்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 17 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
தாயை இழந்த 10 நாள்களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 16 வயது இளைஞராக பாகிஸ்தான் அணியில் சேர்ந்தவர்தான் வேகப்பந்துவீச்சாளர் நசீம் ஷா.
காயம் காரணமாக வெளியேறியிருந்த நசீம் ஷா 13 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்ந்துள்ளார்.
21 வயதாகும் நசீம் ஷா தனது முதல் 4 போட்டிகளிலே 5 விக்கெட்டுகளை 2 முறை எடுத்து சாதனைப் படைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
17 டெஸ்ட் போட்டியில் 51 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 14 ஒருநாள் போட்டிகளில் 32 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
ஷாஹீன் ஷா அஃப்ரிடிக்குப் பதிலாக சௌத் ஷகீல் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஷாஹீன் ஷாவின் வேலைப் பழுவை குறைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தனது முதல் டெஸ்ட் போட்டியை ராவல்பிண்டி மைதானத்தில் ஆகஸ்ட் 21-25ஆம் நாள்களில் விளையாடவிருக்கிறது. 2ஆவது டெஸ்ட் ஆக.30- செப்.3 கராச்சியிலும் நடைபெறவிருக்கிறது.
அடுத்தாண்டு ஏப்ரல் வரை 9 டெஸ்ட், 14 டி20, 17 ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணி விளையாடவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
வேகப் பந்து வீச்சாளர் ஆமீர் ஜமால் உடல்நிலைப் பொருத்து அணியில் சேர்கப்படுவார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் இந்த பரிசு என பிசிபி தெரிவித்துள்ளது.
முகமது அலியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 2022-23 தொடரில் 24 விக்கெட்டுகள் 2023-24 தொடரில் 47 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார்.
பாகிஸ்தான் அணி: ஷான் மசூத் (கேப்டன்) சௌத் ஷகீல் (துணை கேப்டன்) ஆமீர் ஜமால் (உடல்நிலை பொறுத்து), அப்துல்லா ஷஃபீக், அப்ரர் அஹமது, பாபர் அசாம், கம்ரான் குலாம், குர்ரம் ஷஹ்ஜத், மிர் ஹம்சா, முகமது அலி, முகமது ஹுரைரா, முகமது ரிஸ்வான் (கீப்பர்), நசீம் ஷா, சைம் அயூப், சல்மான் அலி அகா, சர்ஃபராஸ் அஹமது (கீப்பர்), ஷாஹீன் ஷா அஃப்ரிடி,
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.