
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்திய வீரர் அமன் ஷெராவத் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 57 கிலோ ஃப்ரீஸ்டைல் காலிறுதிப் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் 12-0 என்ற கணக்கில் அல்பேனியாவின் ஜெலிம்கான் அபகரோவை வீழ்த்தினார்.
ஆசிய சாம்பியன்ஷிப் வெற்றியாளரான அமன், போட்டியின் இரண்டாவது சுற்றில் முதல் அல்பேனிய உலக சாம்பியனான அபகாரோவை வீழ்த்தி ஒன்பது புள்ளிகளைப் பெற்றார்.
இன்று(ஆக. 8) இரவு 9:45 மணிக்கு நடக்கும் அரையிறுதிப் போட்டியில் அமான், ரியோ ஒலிம்பிக்கில் 2016 வெள்ளிப் பதக்கம் வென்ற ஜப்பானின் முதல்நிலை வீரரான ரெய் ஹிகுச்சியை எதிர்கொள்கிறார்.
பாரீஸ் 2024 இல் இந்தியாவிற்கான முதல் மல்யுத்தப் பதக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு அவர் இன்னும் ஒரு வெற்றி பெற்றால் போதுமானதாகும்.
ஆண்களுக்கான 57 கிலோ ஃப்ரீஸ்டைல் காலிறுதி மல்யுத்தப் போட்டியில் அமன் ஷெராவத் 12-0 என்ற கணக்கில் ஜெலிம்கான் அபகரோவை தோற்கடித்ததன் மூலம் அமன் அரையிறுதிக்கு முன்னேறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.